இந்தியாவிற்கான விமான சேவைகளை எயார் கனடா விமான சேவை நிறுவனம் விஸ்தரித்துள்ளது.
ரொறன்ரோவிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
வாரமொன்றில் நான்கு தடவைகள் இந்த விமான சேவை இடம்பெறும் என எயார் கனடா அறிவித்துள்ளது.
மொன்றியல் – டெல்லி விமான சேவை நாளாந்த சேவையாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளது.
கல்கரியிலிருந்து லண்டன் வழியாக டெல்லிக்கு செல்லும் விமான சேவையொன்றும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உள்ளது.
வாராந்தம் இந்தியாவிற்கு சுமார் 25 விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.