சுவிட்சர்லாந்தில் ஆசிரியரை அச்சுறுத்திய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெலின்ஸோனாவில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கல்லூரியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவர் ஆயுதமொன்றை வைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் காரணமாக குறித்த கல்லூரியின் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
என்ன நோக்கத்தில் குறித்த மாணவர் அச்சுறுத்தல் விடுத்தார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.