சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தின் விமானப் பயணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்த அளவிற்கு விமானப் பயணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த மே மாதம் சூரிச் விமான நிலையத்திற்கு வருகை தந்த மற்றும் புறப்பட்ட விமானங்களின் மொத்த எண்ணிக்கை 23645 என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் சூரிச் விமான நிலையத்தின் விமானப் பயணங்களை விடவும் இந்த ஆண்டு மே மாத விமானப் பயணங்கள் 2 வீதத்தினால் மட்டுமே குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் விமானப் பயணங்கள் 8.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது.