இந்திய லோக்சபா தேர்தலில் பாரதீன ஜனதா கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்கு எண்ணும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீன ஜனதா கட்சி 289 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட இந்திய கூட்டணி 175தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய கட்சிகள் 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சி அமைப்பதற்கு 272 ஆசனங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.