சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
4.4 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஷ்விஸ் மற்றும் கிளாரஸ் கான்டன்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து நில நடுக்கவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 2.34 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நில நடுக்கம் காரணமாக சிறு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படட போதிலும் இதுவரையில் சேதங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சுவிட்சர்லாந்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு நிலநடுக்க சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை மிகவும் சிறிய அளவிலானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.