நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் தமிழக மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் இதுவரையில் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.