4.9 C
Switzerland
Monday, March 24, 2025

பாரதீய ஜனதா 293 இடங்களில் முன்னிலை

Must Read

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீன ஜனதா கட்சி 293 இடங்களில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பல கட்டங்களாக நடைபெற்று வந்த வாக்கெடுப்பு நிறைவடைந்து இன்று காலை வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி இரண்டு ஆசனங்களை வென்றுள்ளதுடன், 293  தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 362 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது.

இதேவேளை, இந்திய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட இந்திய கூட்டணி 229 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி 120 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது.

ஏனைய கட்சிகள் 21 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சி அமைப்பதற்கு 272 ஆசனங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES