பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையை இழக்கும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி பல தொகுதிகளில் முன்னணி வகித்து வருகின்றது.
எனினும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் அளவிற்கு ஆசனங்களை பெற்றுக்கொள்ளுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
சில வேளையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நிறுவ நேரிடலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்களவையில் மொத்தமாக 543 ஆசனங்கள் காணப்படுகின்றன.
இதில் 272 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சி ஆட்சியை நிறுவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் பாரதீய ஜனதா கட்சி 104 ஆசனங்களை வென்றுள்ளதாகவும் 135 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 362 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோடி தலைமையிலான அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.