இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி பாராட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி பாராட்டியுள்ளார்.
இலங்கையின் முக்கிய தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
வாழ்த்துக்களுக்கு மிகுந்த நன்றியை பகிர்வதாக மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையுடன் மேலும் இணைந்து செயற்பட விரும்புவதாக மோடி தெரிவித்துள்ளார்.