இலங்கையில் காலநிலை சீர்கேடு காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரண செலவாக 25000 ரூபா வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலையினால் 71 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 93770 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.