சுவிட்சர்லாந்தின் விமானப் படையினர், வீதியில் விமானத்தை தரையிறக்கியுள்ளனர்.
F/A-18 என்ற தாக்குதல் விமானம் வோட் கான்டனின் பய்ரேன் மற்றும் அவென்சிஸிற்கு இடையிலான ஏ1 வீதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான பிரச்சினையும் இன்றி விமானம் நேர்த்தியாக அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதே அதிவேக நெடுஞ்சாலையில் மேலும் மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதிலும் படையினரை போக்குவரத்து செய்யவும், பொருட்களை விநியோகம் செய்யவும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தரையிறக்கப்பட்ட விமானம் வீதியில் இருந்தே புறப்பட்டுச்சென்றதாகவும் தரையிறக்குவதற்கும் பறப்பதற்குமான ஓடுதளமாக அதிவேக நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.