பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் எஸ்.பி கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் யோசனை எஸ்.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேபியன் மோலினாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணையை எதிர்த்து 131 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் இரண்டு பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வே, ஸ்பெய்ன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீன தேசத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, இரு நாட்டு கொள்கையின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் அமுல்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காசீஸ் தெரிவித்துள்ளார்.