பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மொத்தமாக 240 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு மொத்தமாக 272 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 99 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் மொத்தமாக 286 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மொத்தமாக 202 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியொரு கட்சியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நிறுவும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது.
கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.