இந்தியாவில் மூன்றாவது தடவையாகவும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள நரேந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ரணிலுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றியீட்டிய மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு ரணில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியாக பேசியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
நேரந்திர மோடியின் பதவி ஏற்பு நிகழ்விற்கு ஜனாதிபதி ரணில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.