எப் டி ஐ நிறுவனம் வங்குரோத்து அடைந்த காரணத்தினால் சுமார் 10,000 சுவிட்சர்லாந்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பயண முகவர் நிறுவனமான எப.டி.ஐ நிறுவனம் வாங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து பயண ஒன்றியத்தின் தலைவர் மார்ட்டின் விட்வர் இது தொடர்பான தகவலை வெளியேற்றுள்ளார்.
வெளிநாட்டுக்கான பயணங்களை இந்த நிறுவனத்தின் ஊடாக பதிவு செய்து கொண்ட வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறு எனினும் சுவிட்சர்லாந்துக்குள் இந்த பயண முகவர் நிறுவனம் ஊடாக பயணங்களை பதிவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பயண முகவர் நிறுவனத்துடன் பதிவு செய்து கொண்ட எவருக்கும் நட்டம் ஏற்பட இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்.டி.ஐ நிறுவனத்தின் வாங்குரவத்து நிலை காரணமாக பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று வழிகளை ஏற்பாடு செய்து கொடுக்கவும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எப.டி.ஐ ஊடாக பயணங்களை பதிவு செய்து கொண்ட பலரது பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.