ஷாம்பூ மற்றும் பால் போத்தல்களில் சுவிட்சர்லாந்திற்குள் மதுபானத்தை கடத்த முயற்சித்த நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 135 லிட்டர் ஆல்கஹால் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு போத்தல்களில் இந்த மதுபானம் கடத்தப்பட்டுள்ளது.
இவை தூய ஆல்கஹால் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அலுவலகம் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளத தெரிவிக்கப்படுகின்றது.
காரில் நூதனமான முறையில் போத்தல்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், பால், ஷாம்பு போன்றன என்ற போர்வையில் எத்தனோல் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சட்ட விரோதமான முறையில் ஆல்கஹால் கடத்த முயற்சித்தவருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகள் இந்த அபராதத்தை விதித்துள்ளனர்.
இவ்வாறு ஆல்கஹால் நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போது அதற்காக வரி செலுத்த வேண்டும் எனவும் பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வரிகளை செலுத்தாது ரகசியமாக ஆல்கஹாலை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார் என இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.