சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் இந்த ஆண்டில் குறைந்தபட்சம் ஒரு தடவையேனும் வெளிநாடு ஒன்றில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பணவீக்க அதிகரிப்பு போன்ற ஏதுக்கள் காணப்படும் பின்னணியிலும் மக்கள் இவ்வாறு பயணங்களை மேற்கொள்வதற்கு கூடுதல் நாட்டம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் வயது வந்த பிரஜைகளில் 90 வீதமானவர்கள் குறைந்த பட்சம் ஒரு தடவையேனும் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் மூன்று தடவைகளேனும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
நண்பர்கள் அல்லது உறவினர்களை பார்க்கச் செல்வது உள்ளிட்ட தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் சுற்றுலா பயணங்களாகவும் இவ்வாறு சுவிஸ் பிரஜைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளனர்.
இதேவேளை வருமானம் குறைந்த சுவிட்சர்லாந்து பிரஜைகள் தங்களது விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கருத்து கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பேர் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் ஐந்தில் ஒரு பங்கினர் ஐரோப்பா அல்லாத நாடு ஒன்றுக்கு பயணம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாதாந்த வருமானம் 8000 சுவிஸ் பிராங்குகளுக்கு அதிகமான குடும்பங்கள் வருடம் ஒன்றில் மூன்று அல்லது நான்கு தடவைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் பெரும்பான்மையான மக்கள் கோடை காலத்தில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர் என கருத்துக் கணிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.