எக்ஸ் தளம் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரும், உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செய்மதி இணைய சேவையை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகம் இந்த அனுமதி வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
உரிய வகையில் பொதுமக்கள் கருத்துக்களை அறிந்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.