சுவிட்சர்லாந்தில் போதைக்கு அடிமையானவர்களை மீட்கும் விசேட செயல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அரசாங்கம் இது தொடர்பில் திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
நகர நிர்வாகங்கள் மற்றும் கான்டன் நிர்வாகங்கள் மற்றும் விசேட நிபுணர்கள் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை வரையறுப்பதற்கும் சமூக மேம்பாட்டுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொக்கேய்ன் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் 15 முதல் 64 வயது வரையிலானவர்களில் 6.2 வீதமானவர்கள் கொக்கேய்ன் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.