சுவிஸ் விமான சேவையை நிறுவனத்தில் கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் தவறுகள் விடப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரதான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டய்டர் விரான்கிக்ஸ் (Dieter Vranckx) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் முழுமையான அளவில் முதலீடுகளை நிறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சில விடயம் துறைகளில் முதலீடு செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானங்களை புதுப்பித்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
செலவுகள் மிக அதிக அளவில் குறைக்கப்பட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பெருந்தொற்று காலத்தில் நிதி முகாமைத்துவம் செய்யப்பட்ட விதம் தொடர்பில் தவறுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம நிறைவேற்ற அதிகாரியாக பதவி வகித்து வரும் டய்டரின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.