பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் அவர் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
புர்ஜென்ஸ்டோக் சுற்றுலா விடுதியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
80 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பதனை உறுதி செய்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜெர்மனி, ஒஸ்ட்ரியா, கனடா, ஜெர்மனி, போலாந்து, ஸ்பெய்ன், மோல்டோவா, அயர்லாந்து, ஐஸ்லாந்து, செக்குடியரசுகள், பின்லாந்து, லாட்வியா, சுவீடன், லெக்ஸம்பேர்க் உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன.