ஷெங்கன் நாடுகளுக்கான வீசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு குறுகிய கால அடிப்படையில் பிரவேசிக்கும் ஷெங்கன் நாட்டு பிரஜைகளுக்கு இவ்வாறு விசா கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 80 யூரோக்கள் அறவீடு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 90 யூரோக்கள் அறவீடு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான வீசா கட்டணம் 40 யூரோக்களில் இருந்து 45 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று ஆறு வயதிற்கும் குறைந்தவர்களுக்கான வீசா கட்டணம் அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீசா கட்டண அதிகரிப்பிற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறுகிய கால அடிப்படையில் சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசிக்கும் போது இந்த விசா கட்டண நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 90 முதல் 180 நாட்கள் வரையில் தங்கி இருப்பவர்களுக்கான வீசா கட்டணமே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.