சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் UN Economic and Social Council (Ecosoc) உறுப்பு நாடாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் அந்த அமைப்பில் சுவிட்சர்லாந்து அங்கம் வகிக்கும் வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது தடவையாக சுவிட்சர்லாந்து இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வெளிவிவகார திணைக்களம் இந்த தகவ்லகளை ஊடக அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
பேண்தகு அபிவிருத்தி (sustainable development) துறையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கியமான ஓர் அமைப்பாக இந்த பொருளாதார மற்றும் சமூகப் பேரவை இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் சுமார் 54 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.