இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் பாரிய விமான விபத்து ஏற்படக்கூடிய ஓர் சூழ்நிலை தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் விபத்துக்குள்ளாகியிருக்கக் கூடிய அபாயம் உருவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே ஓடு பாதையில் ஒரு விமானம் தரையிறங்கியதுடன் மற்றொரு விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது.
மிகச்சிறிய இடைவெளியில் இந்த இரண்டு விமானங்களும் தரையிறங்கி மற்றும் புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் இண்டிகோ விமான சேவைக்கு சொந்தமான மற்றும் ஒரு விமானமும் இந்த சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்தன.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஏயார் இந்தியா விமானம் புறப்பட்டதுடன் indigo விமானம் தரையிறக்கப்பட்டிருந்தது.
விமான நிலையத்தின் விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணியாளர்களது கவனக்குறைவினால் இவ்வாறு ஒரே ஓடு தளத்தில் இரண்டு விமானங்களும் தரையிறங்கவும் புறப்பட்டுச் செல்லவும் நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.