ஜப்பான் பிரதமர் புமியோ கிசிடா சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ள உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு சுவிட்சர்லாந்து விஜயம் செய்ய உள்ளார்.
சுவிட்சர்லாந்தின் நிட்வால்டனில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் தகவல் பிரிவு பிரதானி நிகலோஸ் பிடாயு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 160 பிரதிநிதிகளுக்கு விடுக்குமாறு உக்ரைன், சுவிட்சர்லாந்திடம் கோரியுள்ளது.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 80 பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து விஜயத்தை உறுதி செய்துள்ளனர்.