ஜெனீவாவில் வெளிநாட்டுப் பிரஜைகள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைககள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிப்பதனை ஜெனீவா மக்கள் நிராகரித்துள்ளனர்.
வாக்களிப்பில் பங்கேற்ற 61 வீதமானவர்கள் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்க அளிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் எட்டு ஆண்டுகள் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டுமெனக் கோரி இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.