சுவிட்சர்லாந்தின் அண்மைக்காலமாக சுய விருப்பின் அடிப்படையில் வதையா இறப்புக்கள் (assisted suicide) அதிகரித்துள்ளன.
1982 ஆம் ஆண்டு முதல் தடவையாக சுவிட்சர்லாந்தில் சுய விருப்பின் அடிப்படையில் ஒருவர் வதையா இறப்பினை ஏற்றுக் கொண்டார்.
வதையா இறப்பு என்பது சுய விருப்பின் அடிப்படையில் மருத்துவ உதவியுடன் தனது வாழ்வை முடித்து கொள்ளும் நடவடிக்கையாகும்.
குறிப்பாக குணப்படுத்த முடியாத நோய்களினால் நாள்தோறும் அவதியும் நோயாளிகள் இவ்வாறு சுய விருப்பின் அடிப்படையில் வதையா இறப்பினை தெரிவு செய்கின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த வதையா இறப்பு நடைமுறையில் இல்லை.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் சுயவிருப்பின் அடிப்படையில் மருத்துவ உதவியுடன் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.
ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நோயாளிகள் சுவிட்சர்லாந்து நோக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் 1594 பேர் இவ்வாறு சுய விருப்பின் அடிப்படையில் மருத்துவ உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மருத்துவ உதவியுடன் வதையா இறப்பிற்கு தங்களை பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.