சுவிட்சர்லாந்தின் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சமாதான மாநாடு நடைபெற உள்ள நிலையில் இவ்வாறு சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் மீது முன்னெடுக்கப்படக்கூடிய சைபர் தாக்குதல்களுக்கு ஆயத்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாநாடுகள் நடத்தப்படும் போது இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுக்கிரன் சமாதான மாநாடு நடத்தப்படுவதற்கு ரஷ்யா சீனா போன்ற நாடுகள் அதிருப்தி வெளியிட்டு வரும் பின்னணியில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.