சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் செல்வந்தர்களின் வரியை குறைக்கும் திட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
செல்வந்தர்கள் மீது அறவீடு செய்யப்படும் வரியை குறைப்பது தொடர்பிலான சட்டத்திற்கு கான்டன் மக்கள் ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் போது இவ்வாறு மக்கள் வரியை குறைப்பது குறித்த யோசனைக்கு தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி உள்ளனர்.
செல்வந்தர்களின் வரிகளை குறைப்பது குறித்த யோசனைக்கு 49.32 வீதமான மக்கள் ஆதரவினை வெளிப்படுத்தி உள்ளனர். செல்வந்தர்களிடம் அறவீடு செய்யப்படும் 15 வீத வரி 12 வீதமாக குறைக்கப்பட உள்ளது.
வரி விதிப்பு மூலம் செல்வந்தர்களுக்கு சுமத்தப்படும் அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய வரி அறவீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, செல்வந்தர்களுக்கு சலுகை வழங்கும் அரசாங்கம் சமூக நலன்புரி திட்டங்களை குறைத்துக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.