பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை திடீரென கலைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் மெக்ரோனின் கட்சி தோல்வியைத் தழுவியிருந்தது.
திடீரென நாடாளுமன்றைக் கலைத்த ஜனாதிபதி மெக்ரோன், இடைத் தேர்தலுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதியும் ஜுலை 7ம் திகதியும் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
குடிப்பெயர்விற்கு எதிரான கட்சியான தேசியவாத கட்சி கூடுதல் வாக்குகள் பெற்றுக்கொள்ளும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மெக்ரோனின் பதவிக் காலம் இன்னமும் மூண்றாண்டுகளுக்கு உண்ட என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மெக்ரோன் திடீரென நாடாளுமன்றை கலைத்து இடைத் தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்துள்ளார்.