நூறு வயதான உலகப் போர் வீரர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
96 வயதான பெண் ஒருவரை அவர் கரம் பிடித்துள்ளார்.
பிரான்ஸின் நோர்மென்ட் பகுதியில் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் சார்பில் போரிட்ட ஹாரோல்ட் டெரின்ஸ் என்ற நபர் இவ்வாறு 96 வயதான ஜியென் செவர்லின் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களில் சிலர் இராணுவ சீருடையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான வாழ்க்கைத் துணைக்காக 96 வருடங்கள் தாம் காத்திருந்ததாக ஜியென் தெரிவித்துள்ளார். தாம் இளமையாகிவிட்டதாக உணர்வதாக டெரின்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் இருவரும் பழகிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
100 வயதான ஹாரோல்ட் அமெரிக்காவின் சார்பில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.