சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்படும் அதிகளவான ஆடைகள் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் ஒன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான கெலெக்ஸஸ் (Galaxus) நிறுவனம் ஆடைகள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறித்த விபரங்களை வாடிக்கையாளர்கள் பார்வையிடக் கூடிய வசதியை உருவாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் தங்கள் விரும்பிய ஆடைகளை கொள்வனவு செய்யும் நோக்கில் இந்த புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியூடாக திரட்டப்பட்ட தகவல்களின் மூலம் அதிகளவான ஆடைகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
1.18 மில்லியன் ஆடை உற்பத்திகளில் 78 வீதமானவை சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளில் அதிகளவானவை சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.