ஐரோப்பாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் சில நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா தவிர்ந்த வேறும் சில பிராந்தியங்களிலும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது உள்ளூர் ஊடகங்களின் செய்தி அறிக்கைகள் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளில் கனடியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.