சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட்டை ரஸ்ய தொலைக்காட்சியொன்று இழிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய தொலைக்காட்சி எல்லை மீறி இழிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், இதில் எவ்வித பாரதூரமான தன்மையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஹம்ஹார்ட்டை மோசமான வார்த்தைகளைக் கொண்டு தூற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதி நடைபெறவுள்ள உக்ரைன் சமாதான மாநாட்டிற்கு வருமாறு ரஸ்ய ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரஸ்ய ஊடகத்தில் தமக்கு எதிரான வெளியிடப்பட்ட செய்திகள் உண்மைத்தன்மையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.