மாலாவி துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணம் செய்த விமானம் காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் துணை ஜனாதிபதியுடன் மேலும் ஒன்பது பேர் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாலாவி பாதுகாப்புப் படைக்கு சொந்தமான இந்த விமானம் ராடார் கண்காணிப்பிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலாவி தலைநகர் லிலிங்வேயிலிருந்து புறப்பட்ட விமானம் இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானம் எம்சூசு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்தது.
விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாலாவியின் ஜனாதிபதி லாஸரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.
விமானத்தை கண்டு பிடிக்கும் வரையில் தேடுதல்களை நிறுத்த வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
என்ன காரணத்தினால் இவ்வாறு விமானம் காணமால் போனது என்பது குறித்து கண்டறியப்படவில்லை.
நாட்டின் முன்னாள் அமைச்சர் காஸம்பாராவின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சிலிமா, விமானத்தில் பயணித்த போது இவ்வாறு விமானம் காணாமல் போயுள்ளது.