உலகின் மிகவும் பழமையான நூல்களில் ஒன்று சுமார் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற ஏல விற்பனையில் இவ்வாறு குறித்த நூல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Christie ஏல விற்பனை நிறுவனம் இந்த நூலை விற்பனை செய்துள்ளது.
பண்டைய வேதாகம புத்தகமே இவ்வாறு பாரியளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல் சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமையானவை என தெரிவிக்கப்படுகின்றது.
வேதாகம உள்ளடக்கத்தைக் கொண்ட உலகின் மிகவும் பழமையான நூல் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் நான்காம் நூற்றாண்டு காலத்தில் இந்த நூல் எகிப்தில் எழுதப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
1950களில் எகிப்தில் காணப்பட்ட இந்த நூல் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
கையெழுத்து பிரதிகளைக் கொண்ட இந்த நூலை பல்வேறு நபர்கள் கொள்வனவு செய்து விற்பனை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஹீப்ரூ பைபள் 38 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.