சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் இயந்திரங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசியல்வாதிகள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் வெளிநாட்டு குற்றவாளிகள் நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் காணப்படும் ஏடிஎம் இயந்திரங்களை இலக்கு வைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலீசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
எல்லை பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அரசியல்வாதிகள் யோசனையும் உண்மை வைத்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் கொள்ளையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பேர்ன் கான்டனின் ஜெகன்ஸ்ட்ராப் கிராமத்தில் அதிகாலை 2 மணி அளவில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று வெடிக்க செய்யப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் வங்கி கட்டிடத்திற்கும் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு நிற ஆடை அணிந்த மூன்று பேர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் செல்வதை கண்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இவ்வாறு நாட்டின் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் வெடிக்கச் செய்யப்பட்டு பணம் கொள்ளையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கிராமிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏடிஎம் இயந்திரங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 15 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.