சுவிட்சர்லாந்து சூக் கான்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் குளறுபடிகள் இடம்பெற்றதாகவும் இதனால் வாக்கெடுப்பு செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை குறித்து சூக் கான்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் நடவடிக்கையில் தவறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி இந்த விடயம் தொடர்பில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
சூக் கான்டனின் 11 மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளில் மட்டுமே சரியான முறையில் வாக்குகள் எண்ணப்பட்டதாக கான்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூன்று மாநகராட்சிகளில் சிறு தவறுகளும், நான்கு மாநகராட்சிகளில் குறிப்பிடத்தக்களவு தவறுகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.