ரஸ்ய படையில் இலங்கைப் படையினரை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்செயன் லெவ்ரொவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரியிடம் இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தற்பொழுது ரஸ்யாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்யா இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ள இலங்கைப் படையினர் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பிலும் அமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் இலங்கைப் பிரதிநிதிகள் ரஸ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.