ராஜபக்சக்கள் இல்லாத கூட்டணி ஒன்றின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்கள் இன்றி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி அமைப்பது குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்,
வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய மற்றும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஓர் அரசாங்கத்தை உருவாக்குவது தெடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதியுடன் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்சக்கள் இல்லாத இந்த கூட்டணிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக இந்தக் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் மூன்று அரசியல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டணிக்கான யாப்பு ஒருவார காலத்தில் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.