சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து கான்டன்களிலும் தொடர்ச்சியாக குடியிருப்புக்களின் வாடகைத் தொகைகள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது அநேகமான கான்டன்களில் வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சூரிச், கிளராஸ், லூசென், சூக், யூரி மற்றும் ஜெனீவா ஆகிய கான்டன்களில் 0.1 வீதம் முதல் 0.7 வீதம் வரையில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.