சுவிட்சர்லாந்து அரசாங்க இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் சமாதான மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பல்வேறு இணைய தளங்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய சைபர் பாதுகாப்பு நிலையம் (National Cyber Security Centre) தெரிவித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினம் சுவிஸ் அரசாங்க இணைய தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பாரியளவு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து சுங்கத் திணைக்களம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
சுமார் ஒரு மணித்தியாலம் சைபர் தாக்குதலினால் இணைய தளங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.