சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு 30 மண்டையோடுகள் மற்றும் 12 உடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார கலைப் பொக்கிஷங்கள் வழங்கியுள்ளது.
இலங்கையின் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 400 கிலோ கிராம் எடையுள்ள கலைப் பொக்கிஷங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்லாந்தின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த கலாச்சார கலைப் பொக்கிஷங்களை இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேசல் அருங்காட்சியகத்திலிருந்து இந்த கலை பொக்கிஷங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கலாச்சார கலைப் பொக்கிஷங்கள் நேற்றைய தினம் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் இலங்கை பழங்குடி இன தலைவர்களும் பங்கேற்று இருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கலைப் பொக்கிஷங்கள் அல்லது கலை பொருட்கள் கலாச்சார மதிப்புடைய கலை பொக்கிஷங்கள் அந்தந்த நாடுகளுக்கு மீள அளிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் ஈராக் நாட்டு கலை பொக்கிஷங்கள் இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மண்டையோடுகள் மற்றும் உடல்கள் மிகவும் பழமையானவை என தெரிவிக்கப்படுகின்றது.