சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டு சிறந்த முறையில் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை பணிப்பாளர் மார்டின் நைடிகர் (Martin Nydegger) இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளார்.
இந்த கோடை காலத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகை தருவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை விடவும் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகளவானச சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்வுகூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 12 வீதத்தினால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.