சுவிஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் பலி

Must Read

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஆர்கேவ் கான்டனின் நூஸ்பாவுமென் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர்.

நிலக்கீழ் வாகனத் தரிப்பிடமொன்றில் வெடிப்புச் சம்பவங்களும் தீ விபத்து ஏற்பட்டதாக கான்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டிடத்தைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.