நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பப்ளிக் ஐ என்ற அரச சார்பற்ற நிறுவனம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது நிறுவனம் சிறுவர் உணவு வகைகளில் மித மிஞ்சிய அளவில் சீனியை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே நெட்ஸ்லே நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறித்த நிறுவனம் விற்பனை செய்யும் குழந்தை உணவு பொருட்களில் இவ்வாறு அதிக அளவு சீனி பயன்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுவிட்சர்லாந்து பொருளாதார விவகார செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளிநாட்டில் நியாயமற்ற வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளில் குழந்தைகளுக்கான உணவு உற்பத்திகள் தொடர்பில் பிழையான திசை திருப்பக் கூடிய தகவல்களை நெட்ஸ்லே நிறுவனம் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிழையாக வழிநடத்தப்பட கூடும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இவ்வாறு அதிக அளவு சீனி சேர்க்கப்படுவதில்லை எனவும் எனினும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஏற்றும் நாடுகளில் இவ்வாறு சீனி கூடிய உற்பத்திகளை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு சட்டத்தின் ஊடாக நெட்ஸ்லே நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த கோரிக்கையை விடுக்கப்படுவதாகவும் நெட்ஸ்லே நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடருமாறும் மத்திய அரசாங்கத்திடம் குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கோரியுள்ளது.