சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கங்கள் மற்றும் மகளிர் உரிமை அமைப்புகள் என்பன கூட்டாக இணைந்து பாரிய அளவிலான இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சூரிச், பேர்ன் மற்றும் ஜெனிவா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாரிய அளவிலான போராட்டம் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சம அளவிலான குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட உள்ள பிரதான போராட்டம் பேர்ன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிலுனர் நிலையில் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்களில் 44 வீதமானவர்கள் ஐயாயிரம் சுவிஸ் பிராங்குகளுக்கும் குறைந்த வருமானத்தை ஈட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்த சம்பளம் போன்ற காரணிகளினால் பெண்களின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.