இந்தப் பேரண்டத்தில் பூமியில் மட்டும் தான் ஜீவ ராசிகள் வாழ்கின்றனவா என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே விடை தெரியாத புதிராக தொடர்கின்றது.
அடிக்கடி பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலும் வேற்றுக்கிரக வாசிகள் அல்லது ஏலியன்கள் தொடர்பிலும் தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றது.
எனினும் அண்மையில் அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகம் ஏலியன்கள் மனிதர்களுடன் மனிதர்களாக வாழ்ந்து வரக்கூடிய ஆய்வு அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளது.
மனிதர்களைப் போன்று மாறு வேடத்தில் இந்த ஏலியன்கள் வாழக்கூடும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அவார்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பறக்கும் தட்டுகள் பூமிக்கு அடியில் அல்லது நிலவில் இருக்கக் கூடும் எனவும் சில வேலைகள் இவை மனித சமூகத்தில் ஒன்றிணைந்து இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
ஏலியன்கள் பல்வேறு வடிவங்களில் வாழ கூடும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஆய்வு அறிக்கைக்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த ஆய்வறிக்கை மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வது குறித்த ஆய்வுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு தீவிர முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.