உக்ரைனின் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.
உக்ரைன் சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
சூரிச் விமான நிலையத்தை வந்தடைந்த செலென்ஸ்கீ, ஹெலிகொப்டர் மூலம் புர்ஜென்ஸ்டோக்கிற்கு பயணித்துள்ளார்.
இன்றைய தினம் உக்ரைன் சமாதான மாநாடு ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த சமாதான மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது