காற்றுக் கொந்தளிப்பில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அண்மையில் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.
இந்த விபத்தில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
போயிங் 777 ரக விமானத்தில் 211 பயணிகளும் 18 விமானப் பணியாளர்களும் பயணித்திருந்தனர்.
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானம், திடீரென காற்றுக் கொந்தளிப்பு காரணமாக தாய்லாந்தில் தரையிறக்கப்பட்டது.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் ஏனைய விமான பயணிகளுக்கும் இவ்வாறு நட்டஈடு வழங்கப்படுவதாக சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.